பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்று வரும் பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற அரைஇறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனும் முதல்தர வீரருமான வீரருமான ரபெல் நடாலும் பெல்ஜியத்தின் டேவிட்கோபினும் போட்டியிட்டனர். இந்தப் போட்டியில் நடால் 6-4, 6-0 என்ற நேர் செட்டில் டேவிட்கோபினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
மற்றொரு அரைஇறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் (Stefanos Tsitsipas) 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்தாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கிரீஸ் வீரர் ஒருவர் ஏ.டி.பி. தொடர் ஒன்றில் இறுதி சுற்றை எட்டுவது 1973-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
இந்தநிலையில் 19வயதான சிட்சிபாஸ் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில், நடாலுடன் போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது