171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் இன்றைய தினம் விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளனர். இன்றைய தினம் மாலை இந்த விசேட கூட்டம் நடத்தப்பட உள்ளது. விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். காலியில் நடத்தப்பட உள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
Spread the love