Home இலங்கைமன்னார் விடத்தல் தீவு ‘புனித அடைக்கல அன்னை ஆலய’அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும் :

மன்னார் விடத்தல் தீவு ‘புனித அடைக்கல அன்னை ஆலய’அபிசேக விழாவும் புதிய ஆயர் வரவேற்பும் :

by admin

மன்னார் விடத்தல் தீவு புனித அடைக்கல அன்னை ஆலய அபிசேக விழாவும், புதிய ஆயர் வரவேற்கும் நிகழ்வும் நேற்று புதன் (2) கிழமை மாலை 5 மணியளவில் விடத்தல் தீவு பங்குத்தந்தை தலைமையில் இடம் பெற்றது. இதன் போது மன்னார் மறைமாவட்டத்தின் புதிய அயர் பேரருட் கலாநிதி இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை பங்கு ரீதியாக வரவேற்கப்பட்டார்.

-மோட்டார் சைக்கில் பவனியாக மறைமாவட்ட ஆயர் விடத்தல் தீவு பங்கில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட பங்கின் பாதுகாவலியாம் புனித அடைக்கல அன்னை ஆலயம் நோக்கி அழைத்து வரப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆயரினால் குறித்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டு அபிசேகம் இடம் பெற்று திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More