குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் பால் மாவிற்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் பால் மாவின் விலை உயர்வடைந்துள்ளது. தற்பொழுது உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் பால் மாவின் விலை 3250-3350 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஜூன் மாதமளவில் இந்த தொகை 3500 டொலர்கள் வரையில் உயர்வடையக் கூடும் எனவும் பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பால் மாவிற்கான விலையை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு இறக்கமதியாளர்கள் கோரியுள்ளனர். ஒரு கிலோ கிராம் எடையுடைய பால் மாவின் விலையை 100 ரூபாவினால் உயர்த்துவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் இந்தக் கோரிக்கை இதுவரையில் எற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் பால் மா இறக்குமதியை வரையறுக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்.