முகப்புத்தக தகவல் திருட்டு விவகாரத்தில் முக்கியமாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. பயனாளிகளின் தகவல் திருட்டு சம்பவம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து முகப்புத்தகம் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
பல்வேறு தகவல் தளங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்ற முகப்புத்தக நிறுவனத் அந்தவகையில் கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற அரசியல் ஆலோசனை தளத்துடனும் இணைந்து செயல்பட்டது.
அந்த நிறுவனம் அரசியல் தலைவர்களுக்கு சில ரகசிய பணிகளை செய்து கொடுத்து வருகின்ற நிலையில் முகப்புத்தக கணக்கு வைத்திருப்பவர்களின் தகவல்களை திருடி தனது வாடிக்கையாளர்களுக்கு விவரங்களை கொடுத்தது தெரியவந்தது.
கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் சுமார் 8 கோடியே 70 லட்சம் பேருடைய தகவல்களை திருடி இருப்முகப்புத்தக நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனால்டிகா தனது செயல்பாட்டை நிறுத்துகொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரித்தமானியாவில் அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது