ஹவாய் தீவுகளில் எரிமலை வெடித்து சிதறிய பகுதிக்கு அருகில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹவாய் தீவுகளின் ஹோனோலுலு பகுதியில் உள்ள கிலுயுயே என்ற எரிமலை நேற்று வெடித்து சிதறியதனையடுத்து அங்கு 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. சுமார் 183 மீட்டர் தூரத்திற்கு எரிமலை குழம்பு பரவியுள்ளது.
மேலும் எரிமலை குழம்புகள் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்த வண்ணம் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் 1500-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளதுடன் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிமலை சீற்றத்தால் 30 மீட்டர் அளவிற்கு தீப்பிழம்புகள் வெளியேறியதில் பல்வேறு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தீவில் மூன்று தெருக்கள் பிளவுப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வசிக்கும் ஏனையோரும் வெளியேற வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது
மேலும் அங்கு அபயகரமான சல்பர் டயக்ஸைட் வாயு காற்றில் கலந்திருப்பதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்துடன் எரிமலை சீற்றத்திற்கு பின்னர் அப்பகுதியில் பலமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கீலவேயா மலையின் தென் கிழக்கில் 6.9 அளவில் நிலநடுக்கம் ஏற்படடுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது