குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்ஸவேயாகும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தற்போதைய நிலைமைக்கு மிகவும் பிரபல்யமான தலைவராக கோதபாய ராஜபக்ஸ காணப்படுகின்றார் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த தெரிவித்துள்ளார். மலர் மொட்டுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களிடம் ஓர் கருத்தக் கணிப்பு நடத்தினால் அதிகமானவர்கள் கோதபாய ராஜபக்சவிற்கே ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு ஜனாதிபதி வேட்பாளர்கள் இருந்தாலும் கோதபாய ராஜபக்ஸவே இறுதியில் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாகுவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சி பேதங்களையும், ஏனைய பேதங்களையும் களையக்கூடிய ஒரே தலைமைத்துவ ஆளுமை கோதபாயவிடம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.