குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பூசல்கள் , முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் யுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசியப் பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் மட்டும் தீர்வு காண முடியாது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியும் எனவும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் சர்வதேச உறவுகள் வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.