குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொங்கோவில் சிறுவர் சிறுமியர் பட்டினி பிணியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சுமார் நான்கு லட்சம் சிறுவர் சிறுமியர் பட்டினிப் பணியினால் மரணத்தை எதிர்நோக்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. கொங்கோவின் காசைய் ( Kasai ) பிராந்தியத்தில் இந்த நிலைமை உக்கிரமாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் அமைதியாகவும் சுபீட்சமாகவும் காணப்பட்ட குறித்த பிராந்தியத்தில் அண்மைய சில ஆண்டுகளாக வன்முறைகள் வெடித்து, மக்கள் பெரும் துயரங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. பட்டினிப் பிணியால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர் சிறுமியருக்கு நிவாரணங்களை வழங்க 88 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.