168
ஸ்பெயினில் நடைபெற்று வருகின்ற மட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஒஸ்ரிய வீரர் டொமினிக் தீம் (Dominic Thiem ) இறுதி போட்டியில் நுழைந்துள்ளார். நேற்றையதினம் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் அண்டர்சனுடன் போட்டியிட்ட டொமினிக் தீம் 6-4 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார்.
தொடர்ந்து 6-2 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றிய தீம் 6-4, 6-2 என்ற கணக்கில் கெவின் அண்டர்சனை வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளார். இவர் காலிறுதியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love