தெலுங்குத் திரையுலக முன்னணி நடிகர்கள் தமிழ் திரையுலகத்தை ஆக்கிரமித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்களான ராம் சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோரின் திரைப்படங்கள் தமிழ் நாட்டில் பெரும் வரவேற்றை பெற்று வருகின்றன.
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்கள் தென்னிந்திய அளவில் வெற்றி பெற்றுள்ளன. ராம்சரண் நடிப்பில் ரங்கஸ்தலம், மகேஷ்பாபு நடிப்பில் பாரத் அனே நேனு, அல்லு அர்ஜுன் நடிப்பில் நா பேரு சூர்யா ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.
தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர்கள் மூவர் நடித்த இந்தப் படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. தென்னிந்தியாவின் கோடை விடுமுறையை இலக்கு வைத்து வெளியிடப்பட்ட இந்த படங்கள் வசூலில் சாதனை புரிந்துள்ளன. ஆந்திராவில் பெற்ற வெற்றிக்கு ஈடாக சென்னையில் வெற்றியை ஈட்டியுள்ளன.
இந்த டிஅப்படையில் ரங்கஸ்தலம் படம் சென்னையில் முதல் 3 தினங்களில் 1.01 கோடி வசூலித்தது. அந்த வசூலை தாண்டி 1.15 கோடியை வசூலித்தது பாரத் அனே நேனு. இந்த இரண்டு படங்களையும் விட இரண்டே நாட்களில் ஒரு கோடியைத் தொட்டது நா பேரு சூர்யா நடித்த படம்.
இதேவேளை கடந்த ஒரு மாதத்தில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரே வெற்றி ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் மாத்திரமே. இதேவேளை இவ் வாரம் வெளியான படங்களில் இரும்புத்திரையும் நடிகையர் திலகமும் வெற்றி பெற்றுள்ளன.