200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜப்பானுடன் நேரடியாக புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள தென்கொரியா இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இரு நாடுகளும் புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவின் ஊடாக பகிர்ந்து கொண்டிருந்தன.
இந்த நடவடிக்கையில் காணப்படும் குறைபாடுகளை கருத்திற் கொண்டு நேரடியாக தகவல்களை பரிமாறிக் கொள்ள இணங்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. கடந்த காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love