கொங்கோ ஜனநாயக குடியரசின் வட மேற்கு நகரான பண்டகாவில் உள்ள ஒரு கிராம பகுதியில் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முதல்முறையாக எபோலா கண்டறியப்பட்டதிலிருந்து, இதுவரை 23 பேர் அதற்கு பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
பண்டகாவில் எபோலா கண்டறியப்பட்டுள்ளதை அந்நாட்டு சுகாதார அமைச்சர் உறுதி செய்துள்ளார். அந்த பகுதியில் பல மில்லியன் மக்கள் வசித்து வருகின்றநிலையில் மீண்டும் பெரும் அளவில் எபோலா பரவுவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் உலக சுகாதார நிறுவனத்தால் அனுப்பப்பட்ட 4000 டோஸ் அளவிலான எபோலா சோதனை மருந்துகள் அந்நாட்டிற்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அண்மையில் எபோலா மீண்டும் பரவ தொடங்கியுள்ள நிலையில் அனைத்து உலக நாடுகளும் அவதானமாக வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருந்தது. எபோலா நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த 2013 ஆம் ஆண்டு மேற்காபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா நோய் 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்து பரவி வந்த நிலையில் இதன்காரணமாக 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டநிலையில் அவர்களில் 11 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது