பஞ்சாப் நஷனல் வங்கியில் சுமார் 11,400 கோடி ரூபாய் பணத்தினை கடனாக பெற்று விட்டு மோசடியினை மேற்கொண்டு விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடிக்கு சொந்தமான 170 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை பொருளாதார அமுலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
வெளிநாட்டில் தங்கியுள்ள நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து 5,714 கோடி ரூபா முடக்கப்பட்டுள்ளதுடன் அவரது ; 141 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான சுமார் 170 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதார அமலாக்கத்துறையினர் இன்று பறிமுதல் செய்துள்ளனர்.