சோமாலியாவில் கடும் மழையுடன் புயல் வீசி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் காரணமாக தகவல் தொடர்பு துண்டிப்பு மற்றும் நாட்டின் பல வீதிகள் சேதமடைந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால்; மீட்பு பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சோமாலியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 29 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதனால், அந்நாட்டின் விவசாய நிலங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை பெரும்அழிவினை எதிர்நோக்கியுள்ள நிலையில் உடனடி நிவாரண நிதியாக சுமார் 80 மில்லியன் டொலர் தொகையை ஐநா சபை மற்றும் சோமாலியா அரசு உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளன.