சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளின் தலைமை சங்கம் அறிவித்துள்ளது. சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவை பெற்ற கிழக்கு துருக்கிஸ்தான் தீவிரவாதிகள் சீனப் படையினரை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.
அதிகமாக உய்குர் முஸ்லிம்கள் வாழும் சிங்ஜியாங் பகுதியில் சீன ஹான் இனத்தவரின் குடியேற்றம் பெருகி வருவதை கண்டித்து இவர்கள் போராடி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தின் மீது இவர்கள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் சீனாவின் பிரபல புகையிரத நிலையங்களுக்குள் கத்தி மற்றும் வாள்களுடன் புகுந்த இவர்கள் ஏராளமான பொதுமக்களையும் கொன்றுள்ளனர்.
இந்நிலையில், முஸ்லிம் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கும் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்ந்த அலுவலகங்களில் சீன நாட்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என இங்குள்ள பிரதான முஸ்லிம் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது