குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முன்னைய செய்திகள் இணைப்பு….
சுன்னாகம் காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக, கடந்த 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளட்ட 5 காவற்துறை சிப்பாய்கள் முன்வைத்த பிணை மனுவை யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் நேற்று (21.05.18) தள்ளுபடி செய்துள்ளது.
காவற்துறையின் தடுப்பில் இருந்த சுமணன் என்ற சந்தேக நபரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றசாட்டு தொடர்பில் கைதிகளான மனுத்தாரர்கள் 5 பேருக்கும் எதிராக யாழ் மேல்நீதிமன்றில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தநிலையில், பிணை வழங்கப்பட்டால் அந்த வழக்கு திசை திருப்பப்படலாம் என அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந் மன்றில் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைத்திருந்தார். இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்.
தொடர்புடைய முன்னைய செய்திகள்….
யாழில் இளைஞர் சித்திரவதை புரிந்து கொலை – 6 பொலிஸாருக்கு 10 வருட கடூழிய சிறை
சுமணனை தாக்கவோ அச்சுறுத்தவோ இல்லை. சித்திரவதை வழக்கில் எதிரிகள் சாட்சியம்.
சுன்னாகம் இளைஞர் கொலை வழக்கு சந்தேக நபர்களின் பிணை நிராகரிப்பு
சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது