தமிழகத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்த உயர் மட்டத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி நீண்ட நாட்களாக மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100ஆவது நாளான இன்று நடைபெற்ற போராட்டத்தில் தமிழக காவல்துறையின் துப்பாக்கிச்சூட்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் வாழும் பகுதியை மாசுபடுத்திக்கொண்டு இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலிடத்தில் இருந்து உத்தரவு வராமல் இத்தகைய துப்பாக்கிச்சூடு நடக்க வாய்ப்பு இல்லை. இந்த சம்பவத்திற்கு அதிகாரிகளை மட்டுமே பழிவாங்கிவிட கூடாது. மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டது யார்? என்பதே தமிழகத்தின் கேள்வி என்றும் அரசு வன்முறையும் கண்டிக்கத்தக்கதே. பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரச்சனைகளுக்கு ரத்தத்தில் முற்றுப்புள்ளி வைக்க கூடாது என்றும் கமல்ஹாசன் கூறினார்.