146
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருக்கின்றார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு கோட்டே நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூரில் இருக்கின்றார் என சர்வதேச காவல்துறையினர், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தெரிவித்துள்ளனர். சட்ட மா அதிபர் திணைக்களம் இதனை நீதிமன்றில் அறிவித்துள்ளது. அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Spread the love