குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் முன் காணப்பட்ட ஒரேயொரு வேம்பு மரத்தை வெட்டியமை பணியாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த அலுவலகத்தின் முன் அழக்காகவும், நிழல் தரும் மரமாகவும், காணப்பட்ட வேம்பு வெட்டப்பட்டமை ஏன் என பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் குமாரவேலை தொடர்பு கொண்டு வினவிய போது புதிய கட்டடம் ஒன்றை அமைக்கும் நோக்கத்திற்காக குறித்த மரத்தை வெட்டியதாக குறிப்பிட்டார்
இவ்வாறான மரங்கள் காணப்படுகின்ற இடங்களில் தவிர்க்க முடியாத நிலையில் கட்டடங்கள் அமைக்கின்ற போது மரங்களை வெட்டாது புதிய கட்டடங்கள் அமைக்கும் தொழிநுட்ப உலகில் பல வருடங்களான மரத்தை வெட்டிய அலுவலக சூழலை வெறுமையாக்கியமை பலரிடத்தே கவலையினை ஏற்படுத்தியுள்ளது.