முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரியுள்ளார்.
மே -18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்லைிக்கான ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் இருந்து தலா 7 ஆயிரம் ரூபா பெறப்பட்டிருந்தது.
எனினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை் நிகழ்வை, வடக்கு மாகாண சபை செய்யவில்லை என்பதனால், இணக்கம் தெரிவிக்கப்பட்டு வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணத்தை, தனக்கு மாகாண சபை மீள வழங்க வேண்டும் என சி.தவராசா அவைத் தலைவருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2016ம் ஆண்டு முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை, வடக்கு மாகாண சபை முன்னெடுத்துவரும் நிலையில், இந்த ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட நிலையில் பல சர்ச்சைகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது