குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசீர்வாதமின்றி ஜனாதிபதி ஒருவர் உருவாக முடியாது என முன்னாள் அமைச்சுர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
இந்த ஆண்டில் ஒருவர் செவ்வாய்க்கிரகத்திற்கு சென்று 2100ம் ஆண்டில் அவர் இலங்கை திரும்பினாலும் அப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவாகவே திகழ்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் தமக்கு தனிப்பட்ட ரீதியில் முரண்பாடு கிடையாது எனவும், அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருப்பதில் பயனில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரே கூறுகின்றார் என்றால் அரசாங்கத்தில் நீடித்திருப்தில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.