அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ (Puerto Rico ) தீவில் கடந்த செப்டம்பர் மாதம் மரியா புயல் தாக்கியதில் 4600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஹவார்ட் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்த மரியா புயலானது அங்கு 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் மோசமாக தாக்கியிருந்தது. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததால் தீவு முழுவதிலும் வெள்ளக்காடானதுடன் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்திருந்தனர். ஆத்துடன் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுக் காணப்பட்டது.
இந்த மரியாப் புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி 64 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.இந்நிலையில் தற்போது ஹவார்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் புயல் மழையால் இரச தரப்பு இறந்ததாக கூறிய எண்ணிக்கையைவிட 70 மடங்கு அதிகமாக, அதாவது 4600க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இவர்களில் மூன்றில் ஒரு பகுதி நபர்கள், மின்சாரம் மற்றும் வீதிகள் துண்டிக்கப்பட்டதாலும் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வினை வரவேற்பதாக தெரிவித்துள்ள மத்திய விவகாரங்களுக்கான அமைச்சர் கார்லஸ் எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களை சிறப்பாக எதிர்கொண்டு உயிரிழப்பை தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த ஆய்வு உதவியாக இருக்குமெனத் தெரிவித்துள்ளார்.