நியூயோர்க் நகருக்கு சென்றுள்ள வடகொரியாவை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வடகொரியாவைச் சேர்ந்த சிரேஸ்ட அதிகாரி ஒருவர் அமெரிக்கா செல்வது சுமார் 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் நிலமை காணப்பட்ட நிலையில் தற்போது வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் எதிர்வரும் யூன் மாத் 12ம் திகதி அவர் சிங்கப்பூரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வடகொரியாவை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியும், அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு மிகவும் நெருக்கமானவருமான கிம் யோங்-சோல் நேற்று அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அமெரிக்காவுக்கு சென்றிருப்பது இதுவே முதல்முறையாகும். நியூயோர்க் நகருக்கு சென்றுள்ள அவர் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில், டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு பற்றி விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.