இலங்கையின் பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனின் பெயர் பிரேரிக்கப்பட்டு உள்ள நிலையில் ஐக்கியதேசியக் கட்சியும் தனது ஆதரவை வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அ ரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 பேரில் பிரதி சபாநாயகராக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவும் உள்டங்கியதாலும் பிரதமரின் நம்பிக்கையில்லா தீரமானத்தை தனது பதவிக்கு அப்பால் ஆதரித்தமையினைத் தொடர்ந்து திலங்க சுமதிபால பததவிலகியிருந்த நிலையில் வெற்றிடமாக உள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு, அங்கஜன் இராமநாதன் பிரேரிக்கப்பட்டார்.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிதுரு ஹெலஉறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் கூட்டு எதிர்க்கட்சி சிந்திப்பதாகவும் அங்கஜன் இராமநாதனை நியமிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.
எனினும் பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதன் நிறுத்தப்படுவதனை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் ஆதரிக்கவில்லை என தகவல் வெளியாகிய போதும் அங்கஜன் இராமநாதனை நியமிக்கும் முடிவில் ஜனாதிபதி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தெரிய வருகிறது.
இந்த நிலையில் ஐக்கியதேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையிலான கூட்டாட்சி இணக்கப்பாட்டில் பிரதி சபாநாயகர் பதவி ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு என உடன்பாடு காணப்பட்டு இருப்பதால் அங்கஜன் இராமநாதனின் தெரிவை ஐக்கியதேசியக் கட்சி ஆதரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அங்கஜன் இராமநாதனுக்கு பிரதி சபாநாயகர் பதவி கிடைக்குமாயின் 48 ஆண்டுகளுக்கு பின் தமிழர் ஒருவருக்கு இந்தப் பதவி மீண்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.