குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சிறுவர் கடத்தல் மற்றும் விற்பனை குற்றச்சாட்டில் தலவாக்கலை லிந்துலை நகரசபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாகலை லிந்துலை நகரசபையின் தலைவரும், மலையக தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளருமான அசோக்க சேபால நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார். நுவரெலியா காவல்துறையினரால் நேற்றிரவு அசோக்க சேபாலவை அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அக்கரபத்தனை பகுதியில் சிறுமி ஒருவர் கடத்தபட்ட சம்பவம் தெடர்பிலும் குழந்தை ஒருவரை சட்டவிரோதமாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பிலும் தலவாகலை லிந்துலை நகரசபையின் தலைவர் உட்பட் நான்கு பேர் கைது செய்யபட்டதாகவும் இந்த கடத்தல் விற்பனை சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு இடம் பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
கைது செய்யப்பட்டவர்களை இன்றையதினம் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். அசோக சேபால, கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தலைமையிலான மலையக தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.