நிலையத்தின் செயற்பாடு முடக்கம் – சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் பல பிரதேசங்களில் ஔிபரப்பு பாதிப்பு
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான ரீ.என்.எல் தொலைக்காட்சி சேவையின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரான ஷான் விக்ரமசிங்கவிற்கு இந்த தொலைக்காட்சி சேவை சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் தொலைதொடர்பு ஆணையகத்தின் அதிகாரிகளினால் ஒளிபரப்ப நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் இயந்திர சாதனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருடாந்த அனுமதிப்பத்திரத்தை இதுவரையில் பெற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் தொலைக்காட்சி நிறுவனத்தின் பொல்கஹாவெல ஒளிபரப்புக் கூடம் மூடப்பட்டுள்ளது.
எனினும் கட்டணங்கள் செலுத்தப்பட்ட நிலையில் ஏன் இவ்வாறு தொலைக்காட்சி நிறுவனம் முடக்கப்பட்டது என்பது புரியவில்லை என நிறுவன நிர்வாகம் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளது.