குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இணைப்பு 2 – பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல்
கைதுசெய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத ரங்கே பண்டாரவை எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுச் சொத்தை தவறாக பயன்படுத்தியமை, மதுபோதையில் வாகனம் ஓட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
சிலாபம் – புத்தளம் வீதியின் பங்கதெனிய- கோட்டபிட்டிய சந்தியில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை யசோத ரங்கே பண்டார ஓட்டிச் சென்ற கெப் வண்டி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் நீர்பாசன அமைச்சு சொந்தமான வாகனத்திற்கும் வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டதுடன் யசோத ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தாரவும் காயடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத ரங்கே பண்டார கைது…
Jun 8, 2018 @ 03:21
ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத ரங்கே பண்டார கைதுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சிலாபம் – புத்தளம் வீதியின் பங்கதெனிய- கோட்டபிட்டிய சந்தியில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை யசோத ரங்கே பண்டார ஓட்டிச் சென்ற கெப் வண்டி வீடொன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் நீர்பாசன அமைச்சுக்கு சொந்தமான வாகனத்திற்கும் வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டதுடன் சம்பவத்தில் காயமடைந்த யசோத ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் காவற்துறையினர் பொதுச் சொத்தை தவறாக பயன்படுத்தியமை, மதுபோதையில் வாகனம் ஓட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.