பெரியகல்லாறு பிரதான வீதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான 48 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான இராசதுரை துவேந்திரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு இவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றவர் எனவும், இன்று காலை வரை வீடு திரும்பாததையடுத்து உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே பெரிய கல்லாறு கடலாட்சியம்மன் வீதியின் பின் பக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மலசல கூடத்திற்கா வெட்டப்பட்ட குழியில் சடலமாக கிடப்பதை கண்டு பிடித்துள்ளனர். காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், அயலவர் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சடலத்தை மீட்டெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியகல்லாற்றைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை இராசதுரை துவேந்திரன் சடலமாக மிட்பு…
143
Spread the love