உத்தரபிரதேசம் மாநிலத்தில் புழுதிப் புயலுடன் பெய்த கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு புழுதிப் புயல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தமையினால் சில மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழை, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குதல் சார்ந்த விபத்துகளில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் தொடர்பாக கவலை தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.