149
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளனர். தேசியப் பட்டியல் ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றிற்கு தெரிவான மூன்று பேரே இவ்வாறு பதவி விலக உள்ள நிலையில் இவர்களின் சார்பில் மூன்று புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு தொழில்சார் நிபுணர்களும் ஒரு இளைஞரும் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Spread the love