குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கரைச்சி பிரதேச சபையின் நான்காவது அமர்வு இன்று(12) தவிசாளர் அ. வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமான சபை அமர்வின் போது தவிசாளரின் தலைமையுரையினை தொடர்ந்து கடந்த அமர்வின் அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போது எழுந்த சர்ச்சையினை தொடர்ந்து தவிசாளர், எதிர்த்தரப்பு உறுப்பினர் ஒருவரை சபையிலிருந்து ஒரு மணித்தியாலயத்திற்கு வெளியேற்றி சபை மண்டபத்தின் கதவினை மூடியுள்ளார்.
கடந்த அமர்வின் அறிக்கை தொடர்பில அறிக்கை தொடர்பில் தங்களின் கடுமையான ஆட்சேபனையை தெரிவித்த எதிர் தரப்பு உறுப்பினர்கள் கடந்த கூட்டத்தில் தாங்கள் பேசிய முக்கிய விடயங்கள் பல அறிக்கையில் இடம்பெறவில்லை என குற்றம் வுமத்தியுள்ளனர்.
மேலும் கரைச்சி பிரதேச சபையில் தவிசாளர் தொடர்ச்சியாக சபை செயற்பாடுகளை கட்சி சார்ந்து கொண்டு செல்கின்றார் எனவும் தவிசாளர் சபை வாகனத்தை கட்சியின் மே தினக் கூட்டத்திற்காக கொண்டு சென்ற விவகாரம் காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் அறிக்கையில எவ்வித பதிவும் இடம்பெறவில்லை. எனத் எதிர்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் தவிசாளர் தனது கட்சி சார்ந்து சபையினை நடத்தி செல்கின்றார் எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பல நடவடிக்கைகள் சபைக்கு தெரியாமலே இடம்பெற்று வருகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
சபையில் 35 உறுப்பினர்கள் இதில் 21 வட்டாரத்தில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்பட்டவர்கள், ஏனைய 14 பேரும் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டு வந்தவர்கள் ஆனால் சபையில் தவிசாளர் செயற்பாடுகளை வட்டார உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி கொண்டு செல்கின்றார். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை பாரபட்சமாக நடத்துகின்றார் எனவும் தவிசாளர் நடுநிலைமையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்ததனைத் தொடர்ந்து சபையில் வாக்குவாதம் இடம்பெற்றது
இந்தநிலையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காது வேறுவிடயங்களுக்கு சபையினை கொண்டு செல்ல முற்பட்ட போது அதற்கு இடமளிக்காது எதிர்தரப்பினர் தங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வலியுறுத்தினார்கள்.இதனையடுத்து எழுந்த சர்ச்சையினை தொடர்ந்து எதிர்தரப்பு உறுப்பினர் ஒருவரை தவிசாளர் ஒரு மணித்தியாலயத்திற்கு சபையிலிருந்து வெளியேற்றினார். இதன் போது கடும் வாக்கு வாக்குவாதத்தில் இரு தரப்பின்னர்களும் ஈடுப்பட்ட போது தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சத்தியானந்தன் போனஸ் உறுப்பினர்கள் வாயை மூடிக்கொண்டு வெளியே செல்லுங்கள் என கூறிய போது சபையில் கடும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
பின்னர் எதிர்தரப்பில் உள்ள சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 11 பேரும் வெளியேறி சென்று ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் மீண்டும் சபையில் வந்து அமர்ந்துகொண்டனர்.