முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளையதினம் விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மனுதாரர் தொடர்பில் எடுக்க வேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பில் நாளை அறிவிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ள நிலையில் குறித்த மனு மீதான விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது
டீ.ஏ.ராஜபக்ஸ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை செல்லுபடிற்றதாக்குமாறு கோத்தாபய ராஜபக்ஸ தனது மேன்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது