Home இலங்கைசுவாமியும் மகிந்தவும், இந்தியாவின் டெல்லியில் கைகோர்க்கிறார்கள்…..

சுவாமியும் மகிந்தவும், இந்தியாவின் டெல்லியில் கைகோர்க்கிறார்கள்…..

by admin

File Photo

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் சிரேஸ்ட்ட தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ டெல்லி செல்கிறார்.. ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய சதிகாரர் இத்தாலியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார் என சுப்பிரமணியன் சுவாமி நேற்று ருவிட்டரில் பதிவிட்டிருந்தார். சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுவது பிரபாகரனையா? பொட்டு அம்மானையா? என்கிற பரபரப்பு கிளம்பியது.

இந்த நிலையில் நேற்று இரவு (15.06.18) சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் ஒரு ட்வீட்டர் பதிவைப் மேற்கொண்டுள்ளார்.. அதில், தம்முடைய விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க தமது அழைப்பை ஏற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ டெல்லி வருகை தர உள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டிருக்கிறார். இக் கருத்தரங்கு குறித்த இதர விவரங்களை சுப்பிரமணியன் சுவாமி வெளியிடவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More