Home இலங்கைபுஸ்ஸல்லாவயில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

புஸ்ஸல்லாவயில் குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

by admin

புஸ்ஸல்லாவயில் இன்றையதினம் காலை குளிக்க சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் வசித்து வந்த துவான் தில்கான் (வயது 24) இன்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

குறித்த இளைஞன் இன்று காலை வேளையில் தனது 02 சகோதரர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ள நிலையில் சகோதாரர்கள் இருவரும் பாடசாலைக்கு செல்லவேண்டும் எனத் தெரிவித்து சென்றுவிட்டனர்.

இதனையடுத்து குறித்த இளைஞரை காணவில்லை என உறவினர்கள் இளைஞன் சடலமாக ஆற்றில் கிடப்பதை கண்டுள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து புஸ்ஸல்லாவ காவல்துறையினருக்கு அறிவிக்கபட்;நிலையில் மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேற்; கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More