Home இலங்கைவட­மா­காண சபைத் தேர்தலில் விக்கி தனி அணியில் களம் புகுவாரா?

வட­மா­காண சபைத் தேர்தலில் விக்கி தனி அணியில் களம் புகுவாரா?

by admin

வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து பிரிந்து சென்று தனித்து போட்­டி­யிடும் வகையில் கூட்­ட­மைப்­புக்கு சவா­லாக மாற்று அணி ஒன்றை உருவாக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வரு­வ­தாக  தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எனினும் விக்­னேஸ்­வரனை  தனி­யாக பிரிந்து செல்ல இட­ம­ளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளான தமி­ழீழ விடு­தலை இயக்கம்(ரெலோ) தமி­ழீழ மக்கள் விடு­தலைக் கழகம் (புளொட்) ஆகி­யன,  கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்கட்சித் தலைவருமான  இரா.சம்­பந்­த­னி­டம் எடுத்துக் கூறியுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் இவ்­வ­ருட இறு­திக்குள் நடத்­தப்­படும் என  அறி­வித்­துள்ள நிலையில் தற்­போது அர­சியல் கட்­சிகள் அது குறித்த வியூகங்களை வகுக்க ஆரம்­பித்­துள்­ளன.

அதன்  அடிப்படையில் வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அடுத்த தேர்­தலில் தான் போட்­டி­யி­டவுள்ளதாக மட்­டுமே தெரி­வித்­துள்ள போதும் கூட்­ட­மைப்­பிலா அல்­லது தனித்தா போட்டியிடுவது என்­பது குறித்து தெளி­வாக எத­னையும் கூற­மு­டி­யாது. தொடர்ச்­சி­யாக மௌனம் காத்து வரு­கின்றார்.

இந்த மௌனத்தையும் கடந்து  அண்­மைய நாட்­களில் தனிக் கட்­சி­யொன்றை ஆரம்­பிப்­பது தொடர்பில் சில நகர்­வு­களை மேற்­கொண்டு வரு­வ­தனை அவதானிக்க முடிகிறது என வடக்கின் அரசியல் தரப்புகள் சுட்டிக்காட்டி உள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More