காஷ்மீரில் தீவிரரவாதிகளுக்கு எதிரான போர் நிறுத்தம் நீட்டிக்கப் படாது எனவும் , தீவிரரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. காஷ்மீரில் புனித ரமழான் மாதத்தையொட்டி மத்திய அரசு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகளை கடந்த மாதம் 17ம் திகதி நிறுத்தியிருந்தது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் மட்டுமே பதில் தாக்குதலை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் ரமழான் மாதம் முடிவடைந்து, ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்களும் நிறைவடைந்த நிலையில் காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவத்தினர் மீண்டும் ஆரம்பித்துள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளை மத்திய அரசு ரமலான் மாதத்தையொட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருந்தது.
தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை. எனவே பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காஷ்மீரில் மீண்டும் தொடங்கிவிட்டன என மத்திய உள்துறை இலாகா நேற்றையதினம் அறிவி;த்துள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகவே அதை தடுத்து நிறுத்த அனைத்து வித நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது