இங்கிலாந்தில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு 69 வயதான ஜேன் பேர்டன் ( Jane Barton ) என்ற பெண் வைத்தியர்தான் காரணம் என விசாரணை குழு குற்றம் சுமத்தியுள்ளது. வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு மரணம் விளைவிக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமான வலி நிவாரணி மருந்தை குறித்த வைத்தியர் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு டயசி பாம் என்னும் மருந்துக்கு பதிலாக வைத்தியர் பேர்டன் பரிந்துரையின் பேரில் டயமார்பின் என்ற மருந்தை தாதிகள் அளவுக்கு அதிகமாக வழங்கியுள்ள நிலையில் அது விசமாக மாறி நோயாளிகளின் உயிரை பறித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த மருந்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் மேலும் ஆதாரங்கள் கிடைக்காதமை காரணமாக 1998-ம் ஆண்டு காவல்துறையினர் விசாரணையை கைவிட்டிருந்தனர். இந்தநிலையில் ஜேன் பேர்டனுக்கு வைத்தயராக செயற்பட தகுதி உள்ளதா என 2001-ம் ஆண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் தொழில் முறையில் தவறாக நடந்து கொண்டமை தெரிய வந்ததையடுத்து 2007-ம் ஆண்டு அவர் பணி ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில் தற்போதைய விசாரணை குழு வைத்தியர் ஜேன் பேர்டன் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு காரணம் என குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது