Home இலங்கைசாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம்

சாரதியின் கவனயீனத்தால் விபத்து – பல மோட்டார் சைக்கிள்கள் – துவிச்சக்கர வண்டிகள் சேதம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாரதியின் தவறால் ஹன்டர் வாகனம் வேக கட்டுப்பாட்டையிழந்து யாழ்.மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடத்தினுள் புகுந்ததால் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் இன்று (19) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட செயலகத்துக்கு ஹன்டர் வாகனம் ஒன்றில் பொருள்கள் ஏற்றிவரப்பட்டன. உத்தியோகத்தர்களின் வாகனத்தரிப்பிடத்துக்கு அருகின் ஹன்டர் வாகனத்தை நிறுத்த சாரதி முயற்சித்துள்ளார். அவ்வேளை வாகனத்தின் பிரேக்கை அமர்த்துவதற்கு பதிலாக அச்சிலேற்றரை சாரதி மாற்றி அழுத்தியதால் வாகனம் வேகக் கட்டுப்பாட்டையிழந்து உத்தியோகத்தர்களின் வாகனத் தரிபிடத்துக்குள் புகுந்தது.

சாரதியின் கவயீனத்தால் இந்த விபத்து ஏற்பட்டது. உத்தியோகத்தர்களின் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 துவிச்சக்கர வண்டிகள் முற்றாகச் சேதமடைந்தன. அவற்றில் பல பெண் உத்தியோகத்தர்களின் மோட்டார் சைக்கிள்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More