தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 தொன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22ம் திகதி நடந்த பேரணியின் போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.
இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக முறைப்பாடுகள் வந்ததால் மாவட்ட உதவி கலெக்டர் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தபோது ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கொள்கலனில் இருந்து சிறிய கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஆலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 1,000 தொன் கந்தக அமிலத்தை அகற்ற மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டதன்படி கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி நேற்று முன்தினம் காலையில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 200 தொன் கந்தக அமிலம் அகற்றப்பட்டுள்ளது