அல்-கய்தா, ஐ.எஸ். ஆகிய தீவிரவாத அமைப்புகளின் புதிய கிளைப் பிரிவுகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயற்படும் அல்-கய்தா மற்றும் ஈராக்கிலிருந்து செயற்படும் ஐ.எஸ் ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அமைப்புகள் புதிதாக தோற்றுவித்திருக்கும் சில இயக்கங்களையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்து தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சு விடுத்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி, அல்-கய்தாவின் கிளை அமைப்பான அல்-கய்தா இந்தியத் துணைக் கண்டம் மற்றும் ஐஎஸ் அமைப்பின் கிளைப் பிரிவான ஐஎஸ்ஐஎஸ்-கே ஆகியவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவுக்கு எதிராகவும், இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மாற்றும் முயற்சியிலும் இவ்விரு இயக்கங்களும் ஈடுபட்டு வந்துள்ளதனால் தேசநலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.