துருக்கியின் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ரையிப் எர்டோகன் ( Tayyip Erdogan ) வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. எர்டோகன் முழுமையான பெரும்பான்மை பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென் தெரிவித்துள்ளார்.
99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 53 சதவீத வாக்குகளை எர்டோகன் பெற்றுள்ளதாகவும், அவரது முக்கிய போட்டியாளரான முஹர்ரம் இன்ஸ் 31 சதவீத வாக்குளை பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அரசு ஊடகம் வெளியிட்ட தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ள எதிர்கட்சி முடிவு என்னவாக இருந்தாலும், தமது ஜனநாயக போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளது
தேர்தல் நடத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட திகதியை விடவும் ஓராண்டு முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது