Home பிரதான செய்திகள் இங்கிலாந்து அவுஸ்திரேலியாவை வைட் வோஷ் செய்துள்ளது.

இங்கிலாந்து அவுஸ்திரேலியாவை வைட் வோஷ் செய்துள்ளது.

by admin


அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டியிலும் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை வைட் வோஷ் செய்துள்ளது.  இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி மன்செஸ்டரில் நேற்று நடைபெற்றது.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தினை தெரிவுசெய்த நிலையில் 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இதையடுத்து 20 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டகளை எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியை வெற்றிபெற செய்த பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன்மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஐந்திலும் வென்ற இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை வைட் வோஷ் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More