நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாக ஜனாதிபதியோ, இலங்கை இராணுவத்தினரோ எந்த சந்தர்ப்பத்தையும் வழங்க மாட்டார்கள் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெலியத்தை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வடக்கு, கிழக்கில் உள்ள எந்த இராணுவ முகாமும் அரசியல் அரசியல் காரணங்களின் அடிப்படையில் அப்புறப்படுத்த இடமளிக்க போவதில்லை. முகாம்களை அப்புறப்படுத்துவது அல்லது அவற்றை இருந்த இடத்திலேயே வைத்திப்பதற்கான சுதந்திரம் முழுமமையாக பாதுகாப்பு தரப்பினரிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே எந்த அரசியல் காரணங்களை கொண்டு வடக்கு, கிழக்கில் உள்ள எந்த படை முகாம்களும் அகற்றப்பட மாட்டாது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாக இடமளிக்கப் போவதில்லை…
136
Spread the love