டெல்லியில் குடியிருப்புகளை புதுப்பிக்கும் திட்டங்களுக்காக மரங்களை வெட்டுவதற்கு, எதிர்வரும் வரும் 4-ம் திகதி வரை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசு உயரதிகாரிகளுக்கான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை அமைப்பதற்காக தெற்கு டெல்லியில மத்திய அரசு சார்பில் நடைபெறும் திட்டத்துக்காக 17 ஆயிரம் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியமைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவானது, நேற்று விசாரணைக்கு வந்தநிலையில் மனுதாரர் சார்பில் முன்னலையான சட்டததரணி டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருகிறது. மரங்கள் வெட்டப்பட்டால் சுற்றுச்சூழல் மோசமாகிவிடும். எனவே, மரங்களை வெட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டெல்லியில் தற்போதைய சூழலில் 17 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டால் அந்த இழப்பை எவ்வாறு சமாளிக்க முடியும்?
இதற்கு அனுமதி அளித்த தேசிய மரங்கள் ஆணையத்தையும் இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்து வழக்கின் விசாரணை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை, இந்தத் திட்டத்தின்கீழ் மரங்களை வெட்டக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.