ஜம்மு காஷ்மீரில் வருடாந்திர அமர்நாத் யாத்திரை எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் 20 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் அதிகரித்ததை தொடர்ந்அங்கு தற்போது ஆளுனர் ஆட்சி அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 2 குழுக்களாக 20 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியிருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் லஷ்கர் தீவிரவாதிகள் எனவும் உளவுத் துறைக்கு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தத் தீவிரவாதிகள் அமர்நாத் பக்தர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் எனவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மிகவும் விழிப்புடன் இருக்கவும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தவும் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது