குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் அனுசரணையில் போசாக்கு கண்காட்சியும் நரமுரசு சஞ்சிகை வெளியீடும் இன்று (28) இடம்பெற்றது இன்றைய தினம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் இடம்பெற்ற இந்நிகழ்வில் நலமுரசு சஞ்சிகை வெளியீடும் போசாக்கு கண்காட்சியும் இடம் பெற்றன. உடல் ஆரோக்கியத்திற்கான உணவு முறைகள் உணவுகள் என்பன கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
இக்கண்காட்சியினை மாணவர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.
அத்தோடு நலமுரசு சஞ்சிகை வெளியீட்டினை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் குமாரவேல் வெளியிட்டு வைக்க வடமாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மருத்துவர் திலீபன்இ மற்றும் கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் என். சுதாகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் மைதிலி , மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு மருத்துவர் ஜெயராசா, மருத்துவர் சுகந்தன்மற்றும் சுகாதார திணைக்களப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.