தீவிரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியமை காரணமாக பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் வைக்க சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் தீவிரவாதத்துக்கு நிதியுதவி வழஙி;குதல் போன்ற நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் அச்சுறுத்தலை முறியடிப்பதனை நோக்கமாக கொண்டதே சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பாகும்
இந்த அமைப்பின் வருடாந்திர கூட்டம் பாரிஸில் நேற்று முன்தினம் 37 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்களின் பங்களிப்புடன் ஆரம்பமாயிருந்தது. இந்தநிலையில் மும்பை தாக்குதலின் முக்கிய சந்தேகநபர் ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத்-தவா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
எனினும் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியைத் தடுக்க போதுமான அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது