முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க ஒபாமா அரசாங்கம் வழங்கிய 678 மில்லியன் டொலர் தொடர்பில் முதலில் விசாரணை செய்யவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார். குருநாகலை மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று 6 மில்லியன் டொலரினை சீனா வழங்கியதாக கூறும் இவர்களே அன்று 18 பில்லியனை பெற்றதாக கூறினார்கள். ராஜித சேனாரத்ன அந்த பணத்தை கண்ணால் கண்டதாக அப்பட்டமாக பொய் கூறியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க ஒபாமா அரசாங்கம் வழங்கியதாக அமெரிக்க ராஜாங்க செயலாளார் ஜோன் கேரி கூறிய 678 மில்லியன் டொலர் தொடர்பில் முதலில் விசாரணை செய்யவேண்டும்.
மகிந்த அரசை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் பணம் வழங்கியமை எல்லாம் இவர்களுக்கொரு செய்தியல்ல நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த அடிப்படை உண்மையற்ற செய்தியே இவர்களுக்கு செய்தி என அவர் குறிப்பிட்டார்..