Home இலங்கைவட்டுக்கோட்டையில் குடும்ப பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் கொள்ளை

வட்டுக்கோட்டையில் குடும்ப பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய பின் கொள்ளை

by admin

குளோபல் தமிழ் செய்தியாளர்

வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் குடும்ப பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி 20 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். நேற்று சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வீட்டின் கூரை ஓடுகளை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் இருவரே குறித்த பெண்ணை வன்புணர்ந்ததுடன் கொள்ளையடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

குறித்த வீட்டில் தம்பதிகளான கணவன் மனைவி இருவரே வாழ்ந்து வருகின்றார்கள். கணவன் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை முகமூடி அணிந்த நிலையில் உட்புகுந்த கொள்ளையர்கள் கணவனை கட்டிப்போட்டு அவரின் வாயினையும் கட்டி விட்டு , கணவனின் கண் முன்னால் மனைவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.

பின்னர் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி உட்பட 20 பவுண் நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் வீட்டினுள் சுமார் மூன்று மணி நேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் போதை பொருள் பாவித்து இருக்கலாம்.

அதேவேளை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 59 வயதுடைய குடும்ப பெண் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல் நிலையை பரிசோதித்தமை மற்றும் அவரிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொள்ளையர்கள்; , போதை பொருள் பாவித்து இருக்கலாம் எனும் சந்தேகம் எழுகின்றது எனவும் மிருகதனமாகவே வன்புணர்ந்துள்ளார்கள் எனவும் என வைத்திய சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

கடந்த வாரம் பாடசாலை சென்ற சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் இடம்பெற்று அதற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மீளவும் , வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமை மக்கள் மத்தியில் அச்ச நிலைமையை ஏற்படுத்தி உள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More